மத்தேயு நற்செய்தி அதிகாரம் 11
மத்தேயு 11
3.விண்ணரசின் தன்மை
- இயேசு தம் பன்னிரு சீடருக்கும் அறிவுரை கொடுத்து ததும் பக்கத்து ஊர்களில் கற்பிக்கவும் நற்செய்தியை அறிவிக்கவும் அவ்விடம் விட்டு அகன்றார்.
விண்ணரசின் பின்னணியில் திருமுழுக்கு யோவான் (லூக் 7:18-35)
- யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக்கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார்.
- அவர்கள் மூலமாக, “வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண் டுமா?” என்று கேட்டார்.
- அதற்கு இயேசு மறுமொழியாக, “நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்.
- பார்வையற்றோர் பார்வை பெறு கின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக் கின்றனர்; தொழுநோயாளர் நலமடை கின்றனர்; காது கேளாதோர் கேட் கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.
- என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர்” என்றார்.
- அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங் கினார்: “நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா?
- இல்லையேல் யாரைப்பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரசமாளிகையில் இருக்கின்றனர்.
- பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
- ‘இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்’ என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது.
- மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றிய தில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
- திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்.*
- திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன.
- உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள்.
- கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.
- –
- “இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணி யினரைக் கூப்பிட்டு, ‘நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை’ என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்.
- எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவு மில்லை, குடிக்கவுமில்லை. இவர் களோ ‘அவன் பேய்பிடித்தவன்’ என் கிறார்கள்.
- மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர் களோ, ‘இம் மனிதன் பெருந்தீனிக் காரன், குடிகாரன், வரி தண்டுபவர் களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறார்கள். எனினும் ஞானம் மெய் யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று.”
திருந்த மறுத்த நகரங்களுக்குச் சாபம் (லூக் 10:13-15)
- இயேசு வல்ல செயல்கள் பல நிகழ்த்திய நகரங்கள் மனம் மாறவில்லை. எனவே அவர் அவற்றைக் கண்டிக்கத் தொடங்கினார்.
- “கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் பூசி மனம் மாறியிருப்பர்.
- தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக் கும் கிடைக்கும் தண்டனையை விடஉங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
- கப்பர் நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படு வாயோ? இல்லை, பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய். ஏனெனில் உன் னிடம் செய்யப்பட்ட வல்ல செயல் கள் சோதோமில் செய்யப்பட்டிருந் தால் அது இன்றுவரை நிலைத்திருக் குமே!
- தீர்ப்பு நாளில் சோதோ முக்குக் கிடைக்கும் தண்டனையை விட உனக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”
தந்தையும் மகனும் (லூக் 10:21-22)
- அவ்வேளையில் இயேசு, “தந் தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்று கிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத் துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தி னீர். 26 ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.
- என் தந்தை எல்லா வற்றையும் என்னிடத்தில் ஒப்படைத் திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டு மென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்’ என்று கூறினார்.
இயேசு தரும் இளைப்பாறுதல்
- மேலும் அவர், “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல் லாரும் என்னிடம் வாருங்கள்,நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தரு வேன்.
- நான் கனிவும் மனத்தாழ்மை யும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என் னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப் பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
- ஆம். என் நுகம் அழுத்தாது; என் சுமைஎளிதாயுள்ளது” என்றார்
