மாற்கு நற்செய்தி அதிகாரம் 9
மாற்கு 9
- மேலும் அவர் அவர்களிடம், “இங்கே இருப்பவர்களுள் சிலர் இறையாட்சி வல்லமையோடு வந்துள்ளதைக் காண்பதற்குமுன் சாக மாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
இயேசு தோற்றம் மாறுதல் (மத் 17:1-13; லூக் 9:28-36)
- ஆறு நாள்களுக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களைமட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார்.
- அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின.
- அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசு வோடு உரையாடிக் கொண்டிருந்தார் கள்.
- பேதுரு இயேசுவைப் பார்த்து, “ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடா ரங்களை அமைப்போம்” என்றார்.
- தாம் சொல்வது என்னவென்று அவ ருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந் தார்கள். அப்போது ஒரு மேகம்
- வந்து அவர்கள்மேல் நிழலிட அந்தமேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவி சாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது.
- உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.
- அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், “மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் இவ்வார்த்தையை அப்
- படியே மனத்தில் இருத்தி, ‘இறந்து உயிர்த்தெழுதல்’ என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண் டார்கள்.
- அவர்கள் அவரிடம், “எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர் கூறுவதேன்?” என்று கேட்டார்கள்.
- அதற்கு அவர், “எலியா முதலில் வந்து எல்லாவற்றை யும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால் மானிட மகன் பல துன்பங்கள் படவும் இகழ்ந்து தள்ளப்படவும் வேண்டுமென்று அவ ரைக் குறித்து எழுதப்பட்டுள்ளதே, அது எப்படி?
- ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியா வந்துவிட்டார். அவர்கள் தாங்கள் விரும்பியவாறெல் லாம் அவருக்குச் செய்தார்கள். அவ ரைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ள வாறே அவை நிகழ்ந்தன” என்றார்.
தீய ஆவி பிடித்திருந்த சிறுவன் நலமாதல் (மத் 17:14-20; லூக் 9:37-43)
- அவர்கள் மற்ற சீடரிடம் வந்த பொழுது, பெருந்திரளான மக்கள் அவர்களைச் சூழ்ந்திருப்பதையும் மறைநூல் அறிஞர் அவர்களுடன் வாதாடுவதையும் கண்டனர்.
- மக்கள் அனைவரும் இயேசுவைக் கண்ட உடனே மிக வியப்புற்று அவரிடம் ஓடிப் போய் அவரை வாழ்த்தினர்.
- அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் இவர் களோடு எதைப்பற்றி வாதாடுகிறீர்கள்?”என்று கேட்டார்.
- அப்போது கூட் டத்திலிருந்து ஒருவர் அவரைப் பார்த்து, “போதகரே, தீய ஆவி பிடித்துப் பேச் சிழந்த என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன்.
- அது அவனைப் பிடித்து அந்த இடத்திலேயே அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் வாயில் நுரை தள்ளிப் பற்களை நெரிக்கிறான்; உடம் பும் விறைத்துப்போகிறது. அதை ஓட்டிவிடும்படி நான் உம் சீடரிடம் கேட்டேன்; அவர்களால் இயல வில்லை” என்று கூறினார்.
- அதற்கு அவர் அவர்களிடம், “நம்பிக்கையற்ற தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று கூறினார்.
- அவர்கள் அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடன் அந்த ஆவி அவனுக்கு வலிப்பு உண்டாக்க, அவன் தரையில் விழுந்து புரண்டான்; வாயில் நுரை தள்ளியது.
- அவர் அவனுடைய தந்தை யைப் பார்த்து, “இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று?” என்று கேட் டார். அதற்கு அவர், “குழந்தைப் பரு வத்திலிருந்து இது இருந்துவருகிறது.
- இவனை ஒழித்துவிடத் தீயிலும் தண் ணீரிலும் பலமுறை அந்த ஆவி இவ னைத் தள்ளியதுண்டு. உம்மால் ஏதா வது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்” என்றார்.
- இயேசு அவரை நோக்கி, “இயலுமானாலா? நம்புகிற வருக்கு எல்லாம் நிகழும்” என்றார்.
- உடனே அச்சிறுவனின் தந்தை, “நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்” என்று கதறினார்.
- அப்போது மக்கள்கூட்டம் தம் மிடம் ஓடிவருவதை இயேசு கண்டு, அந்தத் தீய ஆவியை அதட்டி, “ஊமைச் செவிட்டு ஆவியே, உனக்குக் கட்டளையிடுகிறேன்: இவனை விட்டுப்போ; இனி இவனுள் நுழையாதே” என்றார்.
- அது அலறி அவனுக்கு மிகுந்த வலிப்பு உண்டாக்கி வெளி யேறியது. அச்சிறுவன் செத்தவன் போலானான். ஆகவே அவர்களுள் பலர், “அவன் இறந்துவிட்டான்” என்றனர்.
- இயேசு அவன் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். அவனும் எழுந்தான்.
- அவர் வீட்டில் நுழைந்ததும் அவருடைய சீடர் அவரிடம் தனிமை யாக வந்து. ‘அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?” என்று கேட் டனர்.
- அதற்கு அவர், “இவ்வகைப் பேய் இறை வேண்டலினாலும் (நோன்பினாலும்)* அன்றி வேறு எதனாலும் வெளியேறாது” என்றார்.
இயேசு தம் சாவை இரண்டாம் முறை முன்னறிவித்தல் (மத் 17:22-23; லூக் 9:43ஆ-45)
- அவர்கள் அங்கிருந்து புறப் பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார் கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார்.
- ஏனெனில், “மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்” என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார்.
- அவர் சொன் னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர் கள் அஞ்சினார்கள்.
யார் மிகப் பெரியவர்? (மத் 18:1-5; லூக் 9:46-48)
- அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, “வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந் தீர்கள்?” என்று அவர்களிடம் கேட் டார்.
- அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர்யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவ ரோடு ஒருவர் வாதாடிக் கொண்டு வந்தார்கள்.
- அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு. அவர்களிடம், “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனை வரிலும் கடைசியானவராகவும் அனை வருக்கும் தொண்டராகவும் இருக்கட் டும்” என்றார்.
- பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு,
- “இத்தகைய சிறுபிள்ளை களுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற் றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல. என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்” என்றார்.
இயேசுவின் பெயரால் பேய் ஓட்டியவர்
- அப்பொழுது யோவான் இயேசு விடம், “போதகரே. ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு. நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த் தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்”. என்றார்.
- அதற்கு இயேசு கூறியது: ‘தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார்.
- ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.
- நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்ப தால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண் ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறா மல் போகார் என உறுதியாக உங்களுக் குச் சொல்கிறேன்.”
பாவத்தில் விழச்செய்தல் (மத் 18:6-9; லூக் 17:1-2)
- “என்மீது நம்பிக்கைகொண் டுள்ள இச்சிறியோருள் எவரையாவதுபாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.
- உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதைவிட, கை ஊன முற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.
- –
- உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்ற வராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.
- *
- உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது.
- நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.
- ஏனெனில் பலிப் பொருள் உப்பால் தூய்மையாக்கப்படு வதுபோல் ஒவ்வொருவரும் நெருப் பால் தூய்மையாக்கப்படுவர்.
- உப்பு நல்லது. ஆனால் அது உவர்ப்பற்றுப் போனால் எதைக்கொண்டு அதை உவர்ப் புள்ளதாக்குவீர்கள்? நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள். ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள்.”
