மத்தேயு நற்செய்தி அதிகாரம் 15
மத்தேயு 15
மூதாதையர் மரபு (LOIT 7:1-23)
- அதற்குப்பிறகு பரிசேயரும் மறைநூல் அறிஞரும் எருசலேமி லிருந்து இயேசுவிடம் வந்து,
- “உம் சீடர் மூதாதையரின் மரபை மீறுவதேன்? உணவு அருந்துமுன் அவர்கள் தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே” என்றனர்.
- அவர் அவர்களுக்கு மறு மொழியாக, “நீங்கள் உங்கள் மரபின் பொருட்டுக் கடவுளின் கட்டளையை மீறுவது ஏன்?
- கடவுள், ‘உன் தந்தையையும் தாயையும் மதித்து நட’ என்றும், ‘தந்தையையோ தாயையோ சபிப் போர் கொல்லப்பட வேண்டும்’ என் றும் உரைத்திருக்கிறார்.
- ஆனால் நீங் கள், ‘எவராவது தம் தாயையோ தந் தையையோ பார்த்து, “உமக்கு நான் தரக் கடமைப்பட்டிருக்கிறது கடவு ளுக்குக் காணிக்கையாயிற்று” என்றால்,
- அவர் தம் தந்தையை மதிக்க வேண்டியதில்லை என்று சொல்லுகிறீர்கள். இவ்வாறு உங்கள் மரபின்பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்ற தாக்கி விடுகிறீர்கள்.
- வெளிவேடக் காரரே, உங்களைப்பற்றிப் பொருத்த மாகவே எசாயா இறைவாக்கு உரைத் திருக்கிறார்.
- அவர். இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலையில் இருக்கிறது.
- மனிதக்கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது ‘வீண்’ என்கிறார்” என்றார்.
- மேலும் இயேசு மக்கள் கூட்டத் தைத் தம்மிடம் வரவழைத்து அவர் களை நோக்கி, “நான் சொல்வதைக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள்.
- வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது; மாறாக வாயிலிருந்து வெளிவருவதே மனிதரைத் தீட்டுப் படுத்தும்” என்றார்.
- பின்பு சீடர் அவரை அணுகி, “பரிசேயர் உம் வார்த்தையைக் கேட்டு மனவேதனை அடைந்தனர் என்பது உமக்குத் தெரி யுமா?” என்றனர்.
- இயேசு மறுமொழி யாக, “என் விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றும் வேரோடு பிடுங்கப் படும்.
- அவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவரை வழிநடத்தினால் இருவரும் குழியில் விழுவர்” என்றார்.
- அதற்குப் பேதுரு அவரை நோக்கி, “நீர் சொன்ன உவமையை எங்களுக்கு விளக்கும்” என்று கேட்டார். 16இயேசு அவரிடம், “உங்களுக்கு இன்னுமாபுரியவில்லை?
- வாயினுள் செல் வது அனைத்தும் வயிற்றினூடே சென்று கழிப்பிடத்தில் வெளியேற்றப் படும் எனத் தெரியாதா?
- வாயி னின்று வெளிவருபவை உள்ளத்திலிருந்து வருகின்றன. அவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன.
- ஏனெனில் கொலை, விபசாரம், பரத்தைமை, களவு, பொய்ச்சான்று, பழிப்புரை ஆகிய வற்றைச் செய்யத் தூண்டும் தீய எண் ணங்கள் உள்ளத்திலிருந்து வெளிவரு கின்றன.
- இவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன. கை கழுவாமல் உண்ணுவது மனிதரைத் தீட்டுப்படுத் தாது” என்றார்.
கானானியப் பெண்ணின் நம்பிக்கை (LOTTO 7:24-30)
- இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக் கிச் சென்றார்.
- அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங் கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்” எனக் கதறினார்.
- ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழி யாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, “நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்” என வேண்டினர்.
- அவரோ மறுமொழியாக, “இஸ்ர யேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” என்றார்.
- ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ஐயா, எனக்கு உதவியருளும்” என் றார்.
- அவர் மறுமொழியாக, “பிள்ளை களுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார்.
- உடனே அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” என்றார்.
- இயேசு மறுமொழியாக. “அம்மா, உமது நம்பிக்கை பெரிது.நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.
இயேசு பலவகை நோயாளர்களுக்குக் குணமளித்தல்
- இயேசு அவ்விடத்தை விட்டு அகன்று கலிலேயக் கடற்கரை வழி யாகச் சென்று அங்கே ஒரு மலையின் மீது ஏறி அமர்ந்தார்.
- அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்தனர். அவர்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர், மற்றும் பிற நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டுவந்து சேர்த்தனர். அவர்களை அவர் குண மாக்கினார்.
- பேச்சற்றோர் பேசு வதையும் உடல் ஊனமுற்றோர் நல மடைவதையும் பார்வையற்றோர் பார்க்கிறதையும் கண்டு மக்கள்கூட் டத்தினர் வியந்து இஸ்ரயேலின் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
நாலாயிரம் பேருக்கு உணவு அளித்தல் (LOIT) 8:1-10)
- இயேசு தம் சீடரை வரவழைத்து, “நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர் களிடம் எதுவும் இல்லை; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை; அனுப்பினால் வழி யில் தளர்ச்சி அடைந்துவிடலாம்” என்று கூறினார்.
- அதற்குச் சீடர்கள் அவரிடம், “இவ்வளவு திரளான மக் களுக்கு அளிக்கப் போதுமான உணவு நமக்குப் பாலைநிலத்தில் எங்கிருந்து கிடைக்கும்?” என்று கேட்டார்கள்.
- இயேசு அவர்களைப் பார்த்து, “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?’ என்று கேட்டார். அவர்கள், “ஏழு அப்பங்கள் உள்ளன; சில மீன் களும் இருக்கின்றன” என்றார்கள்.
- தரையில் அமருமாறு மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்.
- பின்பு அந்தஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, சீடர்களிடம் கொடுக்க, அவர் . களும் மக்களுக்குக் கொடுத்தார்கள். ‘அனைவரும் வயிறார உண்டனர்.
- மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தனர்.
- பெண்க ளும் சிறு பிள்ளைகளும் நீங்கலாக நாலாயிரம் ஆண்கள் உண்டனர்.
- பின்பு அவர் மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டுப் படகேறி மகத நாட்டு * எல்லைக்குள் சென்றார்.
