மத்தேயு நற்செய்தி அதிகாரம் 14
மத்தேயு 14
திருமுழுக்கு யோவான் கொல்லப்படுதல் (மாற் 6:14-29; லூக் 9:7-9)
- அக்காலத்தில் குறுநில மன்னன் ஏரோது, இயேசுவைப்பற்றிய செய்தியைக் கேள்வியுற்றான்.
- அவன் தன் ஊழியரிடம், “இவர் திருமுழுக்கு யோவான்தான். இறந்த யோவானைக் கடவுள் உயிர்பெற்றெழச் செய்தார். இதனால்தான் இந்த வல்ல செயல்களை இவர் செய்கிறார்” என்று கூறினான்.
- ஏரோது தன் சகோ தரனான பிலிப்பின் மனைவியாகிய ஏரோதியாவின் பொருட்டு யோவா னைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான்.
- ஏனெனில் யோவான் அவனிடம், “நீர் அவளை வைத்திருப்பது முறையல்ல” என்றுசொல்லிவந்தார்.
- ஏரோது அவரைக் கொலைசெய்ய விரும்பினான்; ஆயி னும் மக்கள் கூட்டத்தினர் அவரை ஓர் இறைவாக்கினர் எனக் கருதியதால் அவர்களுக்கு அஞ்சினான்,
- ஏரோதின் பிறந்த நாளில் ஏரோதியாளின் மகள் அவையினர் நடுவில் நடனம் ஆடி ஏரோதை அகமகிழச் செய்தாள்.
- .அதனால் அவள் எதைக் கேட்டாலும் அளிப்ப தாக அவன் ஒரு வாக்குறுதியை ஆணை யிட்டு அறிவித்தான்.
- அவள் தன் தாய் சொல்லிக்கொடுத்தபடியே, “திரு முழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இங்கேயே எனக்குக் கொடும்” என்று கேட்டாள்.
- இதைக் கேட்ட அரசன் வருந்தினான்; ஆனாலும் தான் விருந்தினர் முன் ஆணையிட்ட தால் அதை அவளுக்குக் கொடுக்கக் கட்டளையிட்டான்;
- ஆள் அனுப்பிச் சிறையில் இருந்த யோவானின் தலையை வெட்டச் செய்தான்;
- அவருடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண் டுவரச் செய்து அதைச் சிறுமியிடம் கொடுத்தான். அவளும் அதைத் தன் தாயிடம் கொண்டு சென்றாள்.
- யோவா னுடைய சீடர் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்; பின்னர் இந்நிகழ்ச்சியினன் இயேசுவிடம் போய் அறிவித்தனர்.
ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்தல் (மாற் 6:30-44; லூக் 9:10-17: யோவா 6:1-14)
- இதைக் கேள்வியுற்ற இயேசு அங்கிருந்து புறப்பட்டுப் படகிலேறிப் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர் களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர்.
- இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந் தோரைக் குணமாக்கினார்.
- மாலை யானபோது, சீடர் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே. நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச்சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட் டத்தை அனுப்பிவிடும்” என்றனர்.
- இயேசு அவர்களிடம், “அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்றார்.
- ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, “எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை” என்றார் கள்.
- அவர், “அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்” என்றார்.
- மக்களைப் புல்தரையில் அமரு மாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன் களையும் எடுத்து, வானத்தை அண் ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்;
- அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத் தனர்.
- பெண்களும் சிறு பிள்ளைக ளும் நீங்கலாக உணவுண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.
கடல்மீது நடத்தல் (மாற் 6:45-52; யோவா 6:5-21)
- இயேசு கூட்டத்தினரை அவ் விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டி ருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக் கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார்.
- மக்களை அனுப்பி விட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார்.
- அதற் குள் படகு கரையிலிருந்து நெடுந் தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக்கொண்டிருந்த தால் அலைகளால் படகு அலைக்கழிக் கப்பட்டது.
- இரவின் நான்காம் காவல்வேளையில்* இயேசு அவர் களை நோக்கிக் கடல்மீது நடந்து வந் தார்.
- அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, “ஐயோ, பேய்”என அச்சத்தினால் அலறினர்.
- உடனே இயேசு அவர்களிடம் பேசினார். “துணிவோடிருங்கள்: நான்தான், அஞ்சாதீர்கள்” என்றார்.
- பேதுரு அவருக்கு மறுமொழி யாக, “ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்” என்றார்.
- அவர், ”வா” என்றார். பேதுருவும் படகி லிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார்.
- அப் பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்’ என்று கத்தினார்.
- இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, “நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?” என்றார்.
- அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது.
- படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, “உண்மையாகவே நீர் இறைமகன்” என்றனர்.
கெனசரேத்தில் நலமளித்தல் (மாற் 6:53-56)
- அவர்கள் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்தார் கள்.
- இயேசுவை யாரென்று அறிந் துணர்ந்த அவ்விடத்து மக்கள் சுற்றுப் புறமெங்கும் ஆள் அனுப்பி எல்லா நோயாளர்களையும் அவரிடம் கொண்டு வந்தனர்.
- அவரது மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனு மதிக்குமாறு அவரை வேண்டினர்; தொட்டவர் யாவரும் நலமடைந்தனர்.
