மத்தேயு நற்செய்தி அதிகாரம் 4
மத்தேயு 4
இயேசு சோதிக்கப்படுதல் (மாற் 1:12-13; லூக் 4:1-13)
- அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்.
- அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார்.
- சோதிக்கிறவன் அவரை அணுகி, “நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்” என்றான்.
- அவர் மறுமொழியாக, மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல. மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்’ என மறைநூலில் எழுதியுள்ளதே”என்றார்.
- பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதி யில் அவரை நிறுத்தி,
- “நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்;
‘கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம் மைத் தாங்கிக் கொள்வார்கள்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது”
என்று அலகை அவரிடம் சொன்னது. - இயேசு அதனிடம், ‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்’ எனவும் எழுதியுள்ளதே” என்று சொன் னார்.
- மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற் றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி,
- அவரிடம், “நீர் நெடுஞ்சாண் கிடை யாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தரு வேன்” என்றது.
- அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, “அகன்று போ, சாத்தானே. ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்றார்.
- பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.
இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல் (மாற் 1:14-15; லூக் 4:14-15)
- யோவான் கைது செய்யப்பட் டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலே யாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
- அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந் திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார்.
- இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது:
- “செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே!
- காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உ உதித்துள்ளது.”
- அதுமுதல் இயேசு, “மனம் மாறுங் கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” எனப் பறைசாற்றத் தொடங்கினார்.
முதல் சீடர்களை அழைத்தல் (மாற் 1:15-20; லூக் 5:1-11)
- இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவ ரும் கடலில் வலைவீசிக் கொண்டிருந் தனர்.
- இயேசு அவர்களைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள்; நான் உங் களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்கு வேன்” என்றார்.
- உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
- அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார் கள். இயேசு அவர்களையும் அழைத் தார்.
- உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
திரளான மக்களுக்குப் பணி புரிதல் (லூக் 6:17-19)
- அவர் கலிலேயப் பகுதி முழுவ தும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தை யும் குணமாக்கினார்.
- அவரைப் பற் றிய பேச்சு சிரியா நாடு முழுவதும் பரவியது. பல்வேறு பிணிகளாலும் வாதைகளாலும் வருந்திய நோயாளர், பேய் பிடித்தோர், மதிமயங்கியோர், முடக்குவாதமுற்றோர் ஆகிய அனை வரும் அவரிடம் அழைத்து வரப்பட் டனர். அவர் அவர்களைக் குணமாக்கினார்.
- ஆகவே கலிலேயா, தெக்கப் பொலி, எருசலேம், யூதேயா, யோர் தானுக்கு அக்கரைப் பகுதி ஆகிய ய இடங்களிலிருந்து வந்த மக்கள் பெருந் திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர்.
