மாற்கு நற்செய்தி அதிகாரம் 13
மாற்கு 13
எருசலேம் கோவிலின் அழிவுபற்றி முன்னறிவித்தல்
- இயேசு கோவிலைவிட்டு வெளியே வந்தபோது அவருடைய சீடருள் ஒருவர், “போதகரே, எத்தகைய கற்கள்! எத்தகைய கட்டடங்கள்! பாரும்” என்று அவரிடம் சொல்ல,
- இயேசு அவரை நோக்கி, “இந்த மாபெரும் கட்டடங்களைப் பார்க்கிறீர் அல்லவா! இங்குக் கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி எல்லாம் இடிக்கப்படும்” என்றார்.
வரப்போகும் கேடுபற்றி அறிவித்தல்
- –
- இயேசு கோவிலுக்கு எதிராக உள்ள ஒலிவ மலைமீது அமர்ந்திருந்த போது பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் அவரிடம் தனியாக வந்து, “நீர் கூறியவை எப்போது நிகழும்? இவையனைத்தும் நிறை வேறப்போகும் காலத்திற்கான அறிகுறிஎன்ன? எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டனர்.
- அதற்கு இயேசு அவர்களிடம் கூறியது: “உங்களை யாரும் நெறிதவறச் செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
- ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நானே அவர்’ என்று சொல்லிப் பலரை நெறிதவறச் செய்வர்.
- போர் முழக்கங்களையும் போர் களைப்பற்றிய செய்திகளையும் கேட்கும் பொழுது நீங்கள் திடுக்கிடாதீர்கள். இவை நிகழத்தான் வேண்டும். ஆனால் இவையே முடிவாகா.
- நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்; பல இடங்களில் நில நடுக்கங்கள் ஏற்படும்; பஞ்சமும் உண் டாகும். இவை கொடும் வேதனைகளின் தொடக்கமே.
- “நீங்கள் கவனமாயிருங்கள்; உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப் பார்கள்; தொழுகைக்கூடங்களில் உங்களை நையப்புடைப்பார்கள்; என் பொருட்டு ஆளுநர் முன்னும் அரசர் முன்னும் நிறுத்தப்பட்டு அவர்கள் முன் எனக்குச் சான்று பகர்வீர்கள்.
- ஆனால் எல்லா மக்களினத்தவர்க்கும் முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட்ட வேண்டும்.
- அவர்கள் உங்களைக் கைதுசெய்து கொண்டு செல்லும்போது என்ன பேசுவது என நீங்கள் முன்ன தாகவே கவலைப்பட வேண்டாம்; அந்த நேரத்தில் உங்களுக்கு அருளப் படுவதையே பேசுங்கள். ஏனெனில் பேசுவோர் நீங்கள் அல்ல. மாறாக, தூய ஆவியாரே.
- மேலும் சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோ தரிகளையும் தந்தை பிள்ளையையும் கொல்வதற்கு என ஒப்புவிப்பர்; பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழும்பி அவர்களைக் கொல்வார்கள்.
- எனது பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பர். ஆனால் இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்.
வரப்போகும் கொடும் வேதனை
- “நடுங்க வைக்கும் தீட்டு’ நிற்கக்கூடாத இடத்தில் நிற்பதை நீங்கள் காண்பீர்கள். படிப்பவர் இதைப் புரிந்து கொள்ளட்டும். அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்.
- வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் கீழே இறங்க வேண்டாம்; தம் வீட்டினின்று எதை யும் எடுக்க அதில் நுழையவும் வேண் டாம்.
- வயலில் இருப்பவர் தம் மேலுடையை எடுக்கத் திரும்பி வர வேண்டாம்.
- அந்நாள்களில் கருவுற் றிருப்போர், பாலூட்டுவோர் ஆகி யோர் நிலைமை அந்தோ பரிதாபம்!
- இவை குளிர்காலத்தில் நிகழாதபடி இறைவனிடம் வேண்டுங்கள்.
- ஏனெ னில் இவை துன்பம்தரும் நாள்களாய் இருக்கும். கடவுள் படைக்கத் தொடங் கிய காலத்திலிருந்து இந்நாள்வரை இத்தகைய வேதனை உண்டான தில்லை; இனிமேலும் உண்டாகப் போவதில்லை.
- ஆண்டவர் அந் நாள்களைக் குறைக்காவிடில் எவரும் தப்பிப் பிழைக்க முடியாது. ஆனால் தாம் தேர்ந்து கொண்டவர்களின் பொருட்டு அவர் அந்நாள்களைக் குறைத்திருக்கிறார்.
- “அப்பொழுது யாராவது உங் களிடம், ‘இதோ, மெசியா இங்கே இருக்கிறார்; அதோ, அங்கே இருக் கிறார்’ எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம்.
- ஏனெனில் போலி மெசியாக்களும் போலி இறைவாக் கினர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறிதவறச் செய்ய அடையாளங்களை யும் அருஞ்செயல்களையும் செய்து காட்டுவர்.
- நீங்களோ கவனமாயிருங் கள். அனைத்தையும் முன்னதாகவே உங்களுக்குச் சொல்லிவிட்டேன்
மானிடமகன் வருகை
- “அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டு விடும். நிலா ஒளிகொடாது.
- விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.
- அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சி யோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.
- பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப் பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.
அத்தி மர உவமை
- “அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங் கள். அதன் கிளைகள் தளிர்த்து இலை கள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள்.
- அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்து விட்டார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
- இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த் தைகள் ஒழியவேமாட்டா.
மானிடமகன் வரும் நாளும் வேனையும்
- “ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது: விண்ணகத்திலுள்ள தூதருக்கோமகனுக்கோ கூடத் தெரியாது.
- கவன மாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது.
- நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாள ராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார்.
- அதுபோலவே நீங்களும் விழிப் பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலை யிலோ எப்போது வருவார் என உங் களுக்குத் தெரியாது.
- அவர் திடீ ரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது.
- நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல் கிறேன்: விழிப்பாயிருங்கள்.”
