மாற்கு நற்செய்தி அதிகாரம் 10
மாற்கு 10
மண விலக்கு (மத் 19:1-12)
- இயே அங்கிருந்து புறப்பட்டு யூதேயப் பகுதிகளுக்கும் யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள் அவரிடம் வந்துகூடினர். அவரும் வழக்கம் போல மீண்டும் அவர்களுக்குக் கற்பித்தார்.
- பரிசேயர் அவரை அணுகி, ‘கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?” என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.
- அவர் அவர்களிடம் மறுமொழியாக, “மோசே உங்களுக்கு இட்டகட்டளைஎன்ன?” என்று கேட்டார்.
- அவர்கள், “மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்” என்று கூறினார்கள்.
- அதற்கு இயேசு அவர்களிடம், “உங்கள் கடினஉள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார்.
- படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், ‘ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.
- இதனால் கணவன் தன் தாய்தந்தையை விட்டுவிட்டுத் தன்மனைவியுடன் ஒன்றித்திருப்பான்.
- இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.’ இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்.
- எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.
- பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர்.
- இயேசு அவர்களை நோக்கி, “தன்மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான்.
- தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்” என்றார்.
சிறு பிள்ளைகளுக்கு ஆசி வழங்குதல் (மத் 19:13-15; லூக் 18:15-17)
- சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.
- இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகை யோருக்கே உரியது.
- இறையாட்சி யைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட் டார் என உறுதியாக உங்களுக்குச்சொல்கிறேன்” என்றார்.
- பிறகு அவர் அவர்களை அரவணைத்து. தம்கைகளை அவர்கள்மீது வைத்து ஆசிவழங்கினார்.
இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வர் (மத் 19:16-30; லூக் 18:18-30)
- இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படி யிட்டு, ‘நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரைக் கேட்டார்.
- அதற்கு இயேசு அவரிடம், “நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே.
- உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? ‘கொலை செய்யாதே; விபசாரம்
செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே;
வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட’ என்றார். - அவர் இயேசுவிடம். “போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப் பிடித்து வந்துள்ளேன்” என்று கூறி னார்.
- அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, “உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப் போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்று அவரிடம் கூறினார்.
- இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.
- இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், “செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்” என்றார்.
- சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசுஅவர்களைப் பார்த்து, “பிள்ளைகளே. செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படு வது மிகவும் கடினம்.
- அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றார்.
- சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “பின் யார்தாம் மீட்புப்பெற முடியும்?” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
- இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, “மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்” என்றார்.
- அப்போது பேதுரு அவரிடம் “பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றிய வர்களாயிற்றே” என்று சொன்னார்.
- அதற்கு இயேசு, “உறுதியாக உங் களுக்குச் சொல்கிறேன்; என் பொருட் டும் நற்செய்தியின் பொருட்டும் வீடு களையோ, சகோதரர்களையோ.) சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ. பிள்ளைகளையோ, நில புலன்களையோ விட்டுவிட்ட எவரும்
- இம்மையில் நூறு மடங்காக வீடு களையும் சகோதரர்களையும் சகோ தரிகளையும் தாயையும் நிலபுலன் களையும். இவற்றோடுகூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.
- முதன்மை யானோர் பலர் கடைசி ஆவர்; கடைசி யானோர் முதன்மை ஆவர்” என்றார்.
இயேசு தம் சாவை மூன்றாம் முறை முன்னறிவித்தல் (மத் 20:17-19; லூக் 18:31-34)
- அவர்கள் எருசலேமுக்குப் போகும் வழியில் சென்றுகொண்டிருந் தார்கள். இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார். சீடர் திகைப் புற்றிருக்க, அவரைப் பின்பற்றிய ஏனையோர் அச்சம் கொண்டிருந்தனர். அவர் மீண்டும் பன்னிருவரை அழைத் துத் தமக்கு நிகழவிருப்பவற்றைக் குறித்துப் பேசத் தொடங்கினார்.
- அவர். “இப்பொழுது நாம் எருசலே முக்குச் செல்கிறோம். மானிட மகன்தலைமைக் குருக்களிடமும் மறை நூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக் கப்படுவார்; அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்து அவரைப் பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள்;
- அவர்கள் ஏளனம் செய்து, அவர் மீது துப்பி, சாட்டையால் அடித்து அவரைக் கொலை செய்வார்கள். மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்” என்று அவர்க ளிடம் கூறினார்.
செபதேயுவின் மக்களது வேண்டுகோள் (மத் 20:20-28)
- செபதேயுவின் மக்கள் யாக் கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், “போத கரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்கள்.
- அவர் அவர்களிடம், “நான் என்ன செய்ய வேண் டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்.
- ‘அவர்கள் அவரை நோக்கி, “நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும் என்று வேண்டினர்.
- இயேசுவோ அவர்களிடம், “நீங்கள் என்ன கேட் கிறீர்கள் என உங்களுக்குத் தெரிய வில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண் ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?” என்று கேட்டார்.
- அவர்கள் அவரிடம், “இயலும்” என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, “நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர் கள்.
- ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளு வது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய் யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்” என்று கூறினார்.
- இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர்.
- இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், ‘பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரிய வர்கள் அவர்கள் மீது தங்கள் அதி காரத்தைக் காட்டுகிறார்கள்.
- ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.
- உங்களுள் முதன்மை யானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக் கட்டும்.
- ஏனெனில் மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய’ மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப் பதற்கும் வந்தார்” என்று கூறினார்.
பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல் (மத் 20:29-34; லூக் 18:35-43)
- இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவை விட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழி யோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந் தார்.
- நாசரேத்து இயேசுதாம் போகி றார் என்று அவர் கேள்விப்பட்டு, “இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கத்தத் தொடங்கினார்.
- பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன் னும் உரக்கக் கத்தினார்.
- இயேசு நின்று, “அவரைக் கூப்பிடுங்கள்” என்று கூறினார். அவர்கள் பார்வை யற்ற அவரைக் கூப்பிட்டு, “துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்” என்றார்கள்.
- அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு,குதித்தெழுந்து இயேசுவிடம் வந் தார்.
- இயேசு அவரைப் பார்த்து, “உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், “ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்” என்றார்.
- இயேசு அவரிடம், “நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார். அவருடன் வழி நடந்தார்.
