மாற்கு நற்செய்தி அதிகாரம் 7
மாற்கு 7
மூதாதையர் மரபு (மத் 15:1-20)
- ஒரு நாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் அவரிடம் வந்து கூடினர்.
- அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண் பதை அவர்கள் கண்டார்கள்.
- பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கை களை முறைப்படி கழுவாமல் உண்ப தில்லை;
- சந்தையிலிருந்து வாங்கிய வற்றைக் கழுவிய பின்னரே * உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல்போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டியமரபுகள் இன்னும் பல இருந் தன.
- ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, “உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்து வதேன்?” என்று கேட்டனர்.
- அதற்கு அவர், “வெளிவேடக்காரர்களாகிய உங்களைப்பற்றி எசாயா பொருத்த மாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது.
- மனிதக்கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்’ என்று அவர் எழுதியுள்ளார்.
- நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர் கள்” என்று அவர்களிடம் கூறினார்.
- மேலும் அவர், “உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளை களை வெகு திறமையாகப் புறக் கணித்து விட்டீர்கள்.
- ‘உன் தந்தையையும் தாயையும் மதித்துநட’ என்றும் தந்தையையோதாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும் என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா!
- ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, ‘நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக் கிறது ‘கொர்பான்’ ஆயிற்று; அதா வது கடவுளுக்குக் காணிக்கையா யிற்று’ என்றால்,
- அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை.
- இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவு. ளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்” என்றுஅவர்களிடம் கூறினார்.
- இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, ‘நான் சொல் வதை அனைவரும் கேட்டுப் புரிந்து கொள்ளுங்கள்.
- வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும்.
- [கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்”]* என்று கூறினார்.
- அவர் மக்கள் கூட்டத்தை விட்டு வீட்டிற்குள் வந்தபோது அவருடைய சீடர் அவரிடம் இந்த உவமை யைப்பற்றிக் கேட்க,
- அவர் அவர் களிடம், “நீங்களுமா இந்த அளவுக்குப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத் தீட்டுப் படுத்த முடியாது என உங்களுக்குத் தெரியாதா?
- ஏனென்றால், அது அவர்களுடைய உள்ளத்தில் நுழை யாமல் வயிற்றுக்குச் சென்று கழிப் பிடத்திற்குப் போய் விடுகிறது” என் றார். இவ்வாறு அவர் எல்லா உணவுப் பொருள்களும் தூயனவென்று குறிப் பிட்டார்.
- மேலும் “மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும்
- –
- ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகிய வற்றைச் செய்யத் தூண்டும் தீய எண் ணங்கள் வெளிவருகின்றன.
- தீயன வாகிய இவை அனைத்தும் உள்ளத்தி லிருந்து வந்து மனிதரைத் தீட்டுப் படுத்துகின்றன” என்றார்.
கானானியப் பெண்ணின் நம்பிக்கை (மத் 15:21-28)
- இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார்.அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரி யாதிருக்க வேண்டுமென்று விரும்பி யும் அதை மறைக்க இயலவில்லை.
- உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது.
- அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடு மாறு அவரை வேண்டினார்.
- இயேசு அவரைப் பார்த்து, “முதலில் பிள்ளை கள் வயிறார உண்ணட்டும். பிள்ளை களுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார்.
- அதற்கு அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக் கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே” என்று பதிலளித்தார்.
- அப்பொழுது இயேசு அவரிடம், “நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம் மகளை விட்டு நீங்கிற்று” என்றார்.
- அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதை யும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.
காதுகேளாதவர் நலம்பெறுதல்
- மீண்டும் இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார்.
- காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குண மாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர்.
- இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காது களில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்;
- பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி ‘எப்பத்தா’ அதா வது ‘திறக்கப்படு’ என்றார்.
- உடனேஅவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளி வாகப் பேசினார்.
- இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட் டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதி யாய் அவர்கள் அதை அறிவித்து வந் தார்கள்.
- அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!’ என்று பேசிக்கொண்டார்கள்.
