மாற்கு நற்செய்தி அதிகாரம் 6
மாற்கு 6
சொந்த ஊரில் இயேசு புறக்கணிக்கப்படுதல் (மத் 13:53-58; லூக் 4:16-30)
- அவர் அங்கிருந்து புறப்பட்டுத்தமது சொந்த ஊருக்கு வந்தார் அவருடைய சீடரும் அவரைப் பின்தொடர்ந்தனர்.
- ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், “இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப் பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்!
- இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே. யூதா சீமோன் ஆகியோர் இவ ருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக் கிறார்கள் அல்லவா?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
- இயேசு அவர்களிடம், “சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற் றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார்.
- அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை.
- அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார்.
இயேசு தம்மைச் சீடருக்கு வெளிப்படுத்தல் பன்னிரு திருத்தூதர் அனுப்பப்படுதல் (மத் 10:1,5-15; லூக் 9:1-6)
- அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்துவந்தார்.
- அப்பொழுது அவர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங் கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார்.
- மேலும், “பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம்.
- ஆனால் மிதியடி போட்டுக் கொள்ள லாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்” என்று அவர்களுக்குக் கட் டளையிட்டார்.
- மேலும் அவர்.நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக் குள் சென்றால், அங்கிருந்து புறப்படும் வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள்,
- உங்களை எந்த ஊராவது ஏற்றுக் கொள்ளாமலோ உங்களுக்குச் செவி சாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது, உங்கள் கால் களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங் கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்” என்று அவர்களுக்குக் கூறினார்;
- அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார் கள்;
- பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.
திருமுழுக்கு யோவான் கொல்லப்படுதல் (மத் 14:1-12; லூக் 9:7-9)
- இயேசுவின் பெயர் எங்கும்பரவியது. ஏரோது அரசனும் அவரைப் பற்றிக் கேள்வியுற்றான். சிலர், ‘இறந்த திருமுழுக்கு யோவான் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார்; இதனால் தான் இந்த வல்ல செயல்கள் இவரால் ஆற்றப்படுகின்றன” என்றனர்.
- வேறு சிலர். “இவர் எலியா” என்றனர். மற் றும் சிலர், “ஏனைய இறைவாக்கின ரைப்போல் இவரும் ஓர் இறைவாக் கினரே” என்றனர்.
- இதைக் கேட்ட ஏரோது, “இவர் யோவானே. அவர் தலையை நான் வெட்டச் செய்தேன். ஆனால் அவர் உயிருடன் எழுப்பப் பட்டு விட்டார்” என்று கூறினான்.
- இதே ஏரோது. தன் சகோதர னான பிலிப்பின் மனைவி ஏரோதி யாவை மனைவியாக்கிக் கொண்டிருந் தான்; அவள் பொருட்டு ஆளனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறை யில் அடைத்திருந்தான்.
- ஏனெனில் யோவான் ஏரோதிடம். “உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல” எனச் சொல்லிவந்தார்.
- அப் போது ஏரோதியா அவர்மீது காழ்ப் புணர்வு கொண்டு, அவரைக் கொலைசெய்ய விரும்பினாள்; ஆனால் அவளால் இயலவில்லை.
- ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவ ருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்.
- ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக் கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான்.
- அப் போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், “உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தரு கிறேன்” என்றான்.
- “நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தரு கிறேன்” என்றும் ஆணையிட்டுக் கூறி னான்.
- அவள் வெளியே சென்று, “நான் என்ன கேட்கலாம்?” என்று தன் தாயை வினவினாள். அவள், “திரு முழுக்கு யோவானின் தலையைக் கேள்” என்றாள்.
- உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, “திரு முழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில்வைத்து இப்போதே எனக்குக் கொடும்” என்று கேட்டாள்.
- இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனா லும் விருந்தினர்முன் தான் ஆணை யிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை.
- உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவா னுடைய தலையைக் கொண்டுவருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி,
- அதை ஒரு தட்டில் கொண்டுவந்து அச்சிறுமி யிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.
- இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்தல் (மத் 14:13-21; லூக் 9:10-17:யோவா 6:1-14)
- திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்துகூடித் தாங்கள் செய்தவை, கற் பித்தவையெல்லாம் அவருக்குத் தெரி வித்தார்கள்.
- அவர் அவர்களிடம், “நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமை யான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்'” என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்த தால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.
- அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள்.
- அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு, எல்லா நகர்களி லிருந்தும் கால்நடையாகவே கூட்ட மாய் ஓடி, அவர்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்தனர்.
- அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக் களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர் களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.
- இதற்குள் நெடுநேரமாகிவிடவே, சீடர் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, ஏற்கெனவே நெடுநேரம் ஆகிவிட்டது.
- சுற்றிலு முள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று உண்பதற்கு ஏதாவது அவர் களே வாங்கிக்கொள்ளுமாறு நீர் மக் களை அனுப்பிவிடும்’ என்றனர்.
- அவர் அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்று பதிலளித்தார். அவர்கள், “நாங் கள் போய் இருநூறு தெனாரியத்திற்கு* அப்பம் வாங்கி இவர்களுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும் என்கிறீரா?” என்று கேட்டார்கள்.
- அப்பொழுது அவர், “உங்களிடம் எத்தனை அப்பங் கள் இருக்கின்றன? போய்ப் பாருங் கள்” என்று கூற, அவர்களும் பார்த்து விட்டு, “ஐந்து அப்பங்களும் இரண்டுமீன்களும் உள்ளன” என்றார்கள்.
- அவர் எல்லாரையும் பசும்புல் தரையில் அமரச் செய்யும்படி சீடர் களைப் பணித்தார்.
- மக்கள் நூறு பேராகவும், ஐம்பது பேராகவும் வரிசை வரிசையாய் அமர்ந்தனர்.
- அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன் களையும் எடுத்து வானத்தை அண் ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தம் சீடரிடம் கொடுத்தார். அவ்வாறே அந்த இரு மீன்களையும் எல்லாருக்கும் பகிர்ந் தளித்தார்.
- அனைவரும் வயிறார உண்டனர்.
- பின் எஞ்சிய அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளை யும் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.
- அப்பம் உண்ட ஆண் களின் தொகை ஐயாயிரம்.
கடல் மீது நடத்தல் (மத் 14:22-33; யோவா 6:15-21)
- இயேசு கூட்டத்தினரை அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது தம் சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரையிலுள்ள பெத்சாய்தா வுக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார்.
- அவர் அவர்களிட மிருந்து விடைபெற்றுக்கொண்டு. இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்றார்.
- பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது. ஆனால் அவர் தனியே கரையில் இருந் தார்.
- அப்போது எதிர்க் காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்; அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார். அப்போது ஏறக்குறைய நான்காம் காவல்வேளை.
- அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு. ‘அது பேய்’ என்று எண்ணி அவர்கள் அலறி னார்கள்.
- ஏனெனில் எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர். உடனே இயேசு அவர்களிடம் பேசி னார். “துணிவோடிருங்கள்; நான்தான்,அஞ்சாதீர்கள்” என்றார்;
- பிறகு அவர்களோடு படகில் ஏறினார். காற்று அடங்கியது. அவர்கள் மிகமிக மலைத் துப் போனார்கள்.
- ஏனெனில் அப் பங்கள்பற்றிய நிகழ்ச்சியை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர் கள் உள்ளம் மழுங்கிப்போயிருந்தது.
கெனசரேத்தில் நலமளித்தல் (மத் 14:34-36)
- அவர்கள் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்து படகைக் கட்டி நிறுத்தினார்கள்.
- –
- அவர்கள் படகைவிட்டு இறங்கிய உடனே, மக்கள் இயேசுவை இன்னார் என்று கண்டுணர்ந்து, அச்சுற்றுப் பகுதி எங்கும் ஓடிச் சென்று, அவர் இருப்பதாகக் கேள்விப்பட்ட இடங் களுக்கெல்லாம் நோயாளர்களைப் படுக்கையில் கொண்டு வரத் தொடங்கி னார்கள்.
- மேலும் அவர் சென்ற ஊர் கள், நகர்கள்,பட்டிகள் அனைத்திலும் உடல் நலம் குன்றியோரைப் பொது விடங்களில் கிடத்தி, அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர் கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்.
