மாற்கு நற்செய்தி அதிகாரம் 3
மாற்கு 3
கை சூம்பியவர் ஓய்வுநாளில் நலமடைதல் (மத் 12:9-14; லூக் 6:6-11)
- அவர் மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கு கைசூம்பியவர் ஒருவர் இருந்தார்.
- சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப் படுத்துவாரா என்று கூர்ந்து கவனித் துக்கொண்டே இருந்தனர். 3இயேசு கை சூம்பியவரை நோக்கி, “எழுந்து, நடுவே நில்லும்” என்றார்.
- பின்பு அவர்களிடம், “ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக்காப்பதா. அழிப்பதா? எது முறை?’ என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள்.
- அவர் சினத் துடன் அவர்களைச் சுற்றிலும் திரும் பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம் பியவரை நோக்கி, “கையை நீட்டும்” என்றார். அவர் நீட்டினார். அவ ருடைய கை மீண்டும் நலமடைந்தது.
- உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.
இயேசுவும் சீடர்களும் திரளான மக்களுக்குப் பணிபுரிதல் (மத் 4:23-25; லூக் 6:17-19)
- இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் யூதேயா,
- எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் அவர் செய்த வற்றையெல்லாம் கேள்வியுற்று அவ ரிடம் வந்தனர்.
- மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத் திருக்குமாறு அவர் சீடருக்குச் சொன் னார்.
- ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொடவேண்டு மென்று வந்து அவர்மீது விழுந்து கொண்டிருந்தனர்.
- தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, ‘இறைமகன் நீரே” என்று கத்தின.
- அவரோ, தம்மை வெளிப் படுத்த வேண்டாமென அவற்றிடம் மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.
பன்னிருவரை அழைத்தல் (மத் 10:1-4; லூக் 6:12-16)
- அதன்பின்பு இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள்.
- –
- தம்மோடு இருக்கவும்நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப் படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத் தூதர் என்றும் பெயரிட்டார்.
- அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன்,
- செபதேயுவின் மகன் யாக் கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் – இவ்விருவருக்கும் ‘இடி யைப் போன்றோர்’ எனப் பொருள் படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார் –
- அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல் பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிர வாதியாய் இருந்த சீமோன்,
- இயேசு வைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.
இயேசுவும் பெயல்செபூலும் (மத் 12:22-32; லூக் 11:14-23; 12:10)
- அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார்.மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்த வும் முடியவில்லை.
- அவருடைய உற வினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார் கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.
- மேலும், எருசலேமி லிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக் கிறது” என்றும் “பேய்களின் தலை வனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்.
- ஆகவே அவர் அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: “சாத்தான் சாத்தானை எப் படி ஓட்ட முடியும்?
- தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது.
- தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது.
- சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவு பட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனதுஅழிவு.
- முதலில் வலியவரைக் கட்டி னாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக் குள் நுழைந்து அவருடைய பொருள் களை எவராலும் கொள்ளையிட முடியாது; அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.
- –
- உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவி யாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப்பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர் களுக்கு மன்னிக்கப்படும்.”
- ‘இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது’ என்று தம்மைப் பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.
இயேசுவின் உண்மையான உறவினர் (மத் 12:45-50; லூக் 8:19-21)
- அப்பொழுது அவருடையதாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.
- அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந் தது. “அதோ, உம் தாயும் சகோதரர் களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள்’ என்று அவரிடம் சொன்னார்கள்.
- அவர் அவர்களைப் பார்த்து, “என்தாயும் என் சகோதரர்களும் யார்? என்று கேட்டு,
- தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, “இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே.
- கடவு ளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார்.
