மாற்கு நற்செய்தி அதிகாரம் 2
மாற்கு 2
முடக்குவாதமுற்றவரைக் குணப்படுத்தல் (மத் 9:1-8; லூக் 5:17-26)
- சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார் அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று.
- பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.
- அப்போது முடக்கு வாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர்.
- மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயல வில்லை. எனவே அவர் இருந்த இடத் திற்கு மேலே வீட்டின் கூரையைஉடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்கு வாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர்.
- இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாத முற்றவரிடம், “மகனே, உன் பாவங் கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
- –
- அங்கே அமர்ந்திருந்த மறை நூல் அறிஞர் சிலர், “இவன் ஏன் இப் படிப் பேசுகிறான்? இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இய லும்?’ என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.
- உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர் களை நோக்கி, “உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?
- முடக்கு வாதமுற்ற இவனிடம் ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்பதா? ‘எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்பதா? எது எளிது?
- மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார். எனவே அவர் முடக்குவாத முற்றவரை நோக்கி,
- “நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ” என்றார்.
- அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக் கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், “இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே” என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
லேவியை அழைத்தல் (மத் 9:9-13; லூக் 5:27-32)
- இயேசு மீண்டும் கடலோரம் சென்றார். மக்கள் கூட்டத்தினர் எல் லாரும் அவரிடம் வரவே, அவர் அவர்களுக்குக் கற்பித்தார்.
- பின்பு அங்கிருந்து அவர் சென்றபோது அல் பேயுவின் மகன் லேவி சுங்கச்சாவடி யில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா”என்றார். அவரும் எழுந்து இயேசு வைப் பின்பற்றிச் சென்றார்.
- பின்பு அவருடைய வீட்டில் பந்தி அமர்ந் திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண் டனர். ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள்.
- அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர் களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், “இவர் வரி தண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?” என்று கேட் டனர்.
- இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, “நோயற்ற வர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர் களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.
நோன்புபற்றிய கேள்வி (மத் 9:14-17; லூக் 5:33-39)
- யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்துவந்தனர். சிலர் இயேசுவிடம், “யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பிருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை?’ என்று கேட்டனர்.
- அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்கமுடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பிருக்க முடியாது.
- ஆனால் மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.
- எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்த புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் பெரிதாகும்.
- அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்ப தில்லை. ஊற்றிவைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; மது வும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத் தோற்பைகளுக்கே ஏற்றது” என்றார்.
ஓய்வுநாளில் கதிர் கொய்தல் (மத் 2:1-8; லூக் 6:1-5)
- ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்துகொண்டே வழி நடந்தனர்.
- அப்பொழுது பரி சேயர் இயேசுவிடம், “பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை ஏன் இவர் கள் செய்கிறார்கள்?” என்று கேட் டனர்.
- அதற்கு அவர் அவர்களிடம், “தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா?
- அபியத்தார் தலைமைக் குருவாய் இருந்தபோது தாவீது இறைஇல்லத் திற்குள் சென்று, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப் பண அப்பங்களைத் தாம் உண்டது மன்றித் தம்மோடு இருந்தவர்களுக் கும் கொடுத்தார் அல்லவா?” என்றார்.
- மேலும் அவர் அவர்களை நோக்கி, “ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப் பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை.
- ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார்.
